துகாராமும்

தமிழ்நாடும்

 

ஸந்த் வாணி

 

சரித்திரம்

 

உலக இலக்கியத்தில

 

சிறுவர் பகுதி

 

சிறுகதைகள்

 

Audio

 
உங்கள்கருத்து
 
முதல் பக்கம்
 
   

Font Problem

ஸ்ரீ துகாராம் மஹாராஜின் சரித்திரச் சுருக்கம்.

- ஹரிபக்த பராயண ஸ்ரீதர் மஹாராஜ் தேஹுகர்.

மராட்டியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்: ஸ்ரீ. சாஸ்தாகோபால்.

 

"யே து தர்ம்யாம்ருதமிதம்" கீதை, ௧௨-௨0.

 

"தே ஹே கோஷ்டீ ரம்ய, அம்ருததாராதர்ம்ய,

கரிதீ ப்ரதீதி கம்ய, ஐகோனி ஜே". ஞானதேவீ, ௧௨-௨௩0.

 

    தெய்வத்தின் சரித்திரங்களை ’பரமாம்ருதம்’ என்றும், பக்தர்களின் சரித்திரங்களை ’தர்மாம்ருதம்’ என்றும் கூறுவார்கள். தெய்வத்தின் சரித்திரங்களை ஸந்துக்கள் பாடினர்கள். நம்போன்றோர் ஸந்துக்களின் சரித்திரங்களைப் பாடியிருந்தாலும், அது கடினமான காரியமே. காரணம், ஸந்துக்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித் தெரிவதில்லை; எப்படித் தெரிகிறார்களோ அப்படி இருப்பதில்லை. இருந்தாலும், நமது படைப்புகள் அவர்களுக்கு மரியாதை அளிப்பதாகவே இருக்கும்.

 

"ஆமுதே(ம்) கராவயா கோடீ, தே ஜாலிச நாஹீ வாக்ஸ்ருஷ்டி".

ஆ(ம்)ஹாலாகீ திடீ தே(ம்) திடீச நோஹே" (அம்ருதானுபவ்).

 

    அதைப்பற்றி நாம் அவர்களிடம், "நீங்கள் யார்? எதைச் சேர்ந்தவர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? உங்களுடைய பெயர் என்ன? உருவமென்ன?", என்று கேட்டால் எதுவுமில்லை என்ற பதிலே கிடைக்கும்.

 

"கா(ம்)ஹீ(ம்)ச மீ நவ்ஹே கோணியே(ம்) கா(ம்)வீ(ம்)சா.

யேகடு டாயீ(ம்)ச்யா டாயீ(ம்) ஏகு. (௧)

நாஹீ(ம்) ஜாத கோடே(ம்) யேத பிரோனியா,

அவகேசி வாயா(ம்)வீண போல. (௨)

துகா ம்ஹணே நா(ம்)வ ரூப நாஹீ(ம்) ஆ(ம்)ஹா,

வேகளா த்யா கர்மா அகர்மாசீ". (௩)

 

      இந்தக் நிலைமையில், நான் ஸந்த ஸ்ரேஷ்ட ஸ்ரீ துகாராம் மஹாராஜின் மஹத்வமுள்ள சரித்திரத்தைச் சுருக்கமாக அளிக்க முயற்சிக்கிறேன். 

 

௨. பிறப்பும், முன்னோர்களும்.