|
துகாராம் மஹாராஜின் காலத்தில், (மஹாராஷ்ட்ராவிற்குத்)
தெற்கில் முஸல்மான்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது, மற்றும் போர்த்துகீசியரும்
கோவாவில் இருந்தனர். பீஜாப்பூர் அடில்ஷா, அஹமத்நகர் நிஜாம்ஷாஹி, கோல்கோண்டா
குதுப்ஷாஹி ஆகிய மூன்று முஸல்மான் ராஜாக்களும் தங்களுக்குள் சண்டையிட்ட வண்ணம்
இருந்தனர். அதனால், கிராமங்கள் பாழடைந்துகொண்டு வந்தன, கொள்ளைகள் நடந்தன, ராஜாக்களோ
கேளிக்கைகளில் மட்டும் நாட்டம் உடையவர்களாக இருந்தனர், பிரஜைகள் மிகவும் துன்பம்
அடந்தனர். மஹாராஜே, "பிராமணர்கள் தங்களுடைய ஆசாரங்களை விட்டுவிட்டனர்,
க்ஷத்திரியர்கள் வைசியர்களைக் கொள்ளை அடிக்கிறார்கள். பலவந்தமாக மத மாற்றம் செய்யப்
படுகிறது" என்று கூறியுள்ளார்.
"ஸாண்டிலே ஆசார,
த்விஜ சாஹாட ஜாலே சோர.
ராஜா ப்ரஜா பிடீ,
க்ஷத்ரீ வைஸ்ய யாசீ நாடீ".
வைசியர் மற்றும் சூத்திரர்களைப் பற்றி
சொல்லும்படி ஒன்றும் இல்லை. தர்மத்திற்குக் குறைவு ஏற்பட்டது. அதர்மம் மிகுந்தது.
"ஐஸே அதர்மாசே பள,
தர்ம லோபலா ஸகள". (௧)
மக்கள் அதர்மத்தையே தர்மம் எனக்
கருதினார்கள். ஸந்துக்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது.
"ஸந்தா(ம்) நாஹீ மான,
தேவ மானீ முஸல்மான்". (௧)
சமூகம் நானவிதமான தெய்வங்களைத்
தொழுதுகொண்டு, சிதறுண்டு போயிற்று; தர்மத்தின் மீது பற்றில்லாமல், அஞ்ஞானத்தின்
இருளில் மூழ்கிற்று. ஜனங்கள் பிரகாசம் அளிக்கும் ஸூர்யனின் உதயத்தை எதிர்பார்த்துக்
காத்திருந்தனர். இந்த சமயத்தில், தேஹு கிராமத்தில், ஒரு சித்ஸூர்யன் உதயமாயிற்று.
"ஸந்தக்ருஹ மேளீ,
ஜகத் அந்த்யா கிளீ,
பைல உதயாசளீ,
பானு துகா". (௩) (ராமேஸ்வர பட்டின்
அபங்கம்).
மஹான் பாகவத்பக்த போல்ஹோபா, மாதா
கனகாயீ ஆகியோரின் திருவயிற்றில் சக வருஷம் ௧௫௩0 மத்தியில் (கி.பி. ௧௬0௯), ஸ்ரீ
துகாராம் மஹாராஜ் அவதரித்தார். செல்வாக்குள்ள குடும்பமாக இருந்ததினால், இளமைப்
பருவம் பெரும் குதூஹலத்துடனும், விளையாட்டிலும் கழிந்தது. கிராமத்து
உபாத்தியாயர்களிடம் இளமைக் கல்வி கற்றார். உபாத்தியாயர்கள் பிள்ளைகளுக்கு,
தங்களுடைய கையில் சிலேட்டுப் பலகையைப் பிடித்துக்கொண்டு, பிள்ளைகளின் கையைப்
பிடித்து, எழுதுவதற்குக் கற்பித்தார்கள்.
"அர்பகாசே ஸாடீ,
பந்த ஹாதே தரிலீ பாடீ." (௧)
முலே(ம்) கடே மாண்டூன் முளாக்ஷரே
காடீத,
ஓனாம்யாச்யா காளே,
கடே மண்டியேலே பாளே". (௧)
தந்தை போல்ஹோபா, மஹாராஜுக்கு,
நடைமுறை மற்றும் பரமார்த்திகத்தைப் பற்றிய கல்வியைப் போதித்தார். மூத்த ஸஹோதரர்
ஸாவ்ஜீக்கு வியாபாரம், தொழில் செய்வதில் நாட்டாமில்லாத காரணத்தினால், தந்தையார் ஸ்ரீ
துகாராம் மஹாராஜிடம், தொழில், வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் ஆகியவற்றைக் கவனித்துக்
கொள்ளும்படிச் சொன்னார்.
சந்தைப்பேட்டையில் வியாபாரத்தைக்
கவனிப்பத்ற்காக வைத்திருந்த வீட்டில், தந்தையாரின் மேற்பார்வையில் தொடர்ந்து வேலை
செய்து, வியாபாரத்தின் நுணுக்கங்களை அறிந்துகொண்டார். தன்னுடைய ௧௩வது வயதில்,
மஹராஜிற்கு கழுத்தில் ஸம்சாரச் சுமையைத் தாங்க வேண்டியதாயிற்று (திருமணம் நிகழ்ந்தது).
உடனே, அவரும் தனியாக வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தார். கொடுக்கல்-வாங்கல்,
வியாபாரம் ஆகியவற்றை நன்றாக நடத்தி வந்தார். எல்லா ஜனங்களும் அவரை புகழ்ந்து
கொண்டாட ஆரம்பித்தார்கள். குடியிருக்கும் வீட்டில் ப்ரகாசமான, ஸாத்வீகமான சூழ்நிலை
நிலவியது. சந்தைப்பேட்டையில் உள்ள வீட்டில் வியாபாரம் பெருகியது. மூன்று
ஸஹோதரர்களுக்கும் விவாஹம் நடந்தேறியது. மஹாராஜின் முதல் மனைவி தொடந்து ஆஸ்த்துமா
நோயால் பீடிக்கப்பட்டிருந்ததால், அவருக்கு புனேயில் இருந்த பிரசித்தி பெற்ற,
லேவாதேவி செய்யும் வியாபாரி ஆப்பாஜி குள்வே என்பவரின் புதல்வியான கன்னிகை
ஸௌபாக்கியவதி ஜீஜாபாய் என்ற ஆவளியை இரண்டாவதாக விவாஹம் செய்து வைத்தனர். இது, ஒரு
ஐஸ்வர்யமுள்ள குடும்பம், மற்றொரு ஐஸ்வர்யமுள்ள குடும்பத்துடன் சம்பந்தம்
செய்துகொண்டதாகும். இந்த ஐஸ்வர்யமான இணைப்பினால், வீட்டில் தன-தான்யங்கள்
நிறம்பியிருந்தன. தாய்-தந்தையர், மற்றும் ஸஜ்ஜனங்கள், பந்துக்கள் பிரேமையுடன்
இருந்தனர். சரீரம் ஆரோக்கியத்துடன் இருந்தது. எதனுடையவும், எந்தவிதமான குறையும்
இல்லாதிருந்தது.
"மாதா பிதா பந்து ஸஜ்ஜன,
கரீ(ம்) உதண்ட தன தான்ய,
சரிரீ ஆரோக்ய லோகாந்த மான,
ஏகஹி உணே அஸேனா". - துகாராம் சரித்ரம்,
மஹிபதிபாபா.
இப்படிப்பட்ட ஸுகமான, ஸமாதானமான,
ஐஸ்வர்யமான நாட்கள் எவ்வளோ கழிந்தன. எப்படிக் கழிந்தது என்று கொஞ்சம்கூடப்
புரியவில்லை. இதன்பின்னர், ஸுகத்திற்குப்பின் துக்கம் வந்தது. இனி, வருங்காலம்
ஆரம்பமாயிற்று. |