துகாராமும்

தமிழ்நாடும்

 

ஸந்த் வாணி

 

சரித்திரம்

 

உலக இலக்கியத்தில

 

சிறுவர் பகுதி

 

சிறுகதைகள்

 

Audio

 
உங்கள்கருத்து
 
முதல் பக்கம்
 
   

Font Problem

௪. வாத்ஸல்யமுள்ள பெற்றோர்களின் மறைவு.

    (மஹாராஜின்) ௧௭வது வயதில், பிரியமாகவும், ஆசானாகவும் இருந்த, தந்தை போல்ஹோபா காலமானார். துகாராம் மஹாராஜ் அந்த மிராசின் வாரீசுதாரர் ஆனார்.

 

"பாப கரீ ஜோடீ லேகராசே ஓடீ,

ஆபலீ கரவண்டீ வாளவோனீ, (௧)

ஏகாஏகீ(ம்) கேலா மிராசீசா தனீ,

கடீயே வாஹுனி பார காந்தீ". (௨)

 

மிராசீ = தொழில்-வியாபாரமும், பகவானின் ஸேவையும்.

 

எவரை ஸம்ஸார தாபங்கள் பொசுக்குவதில்லையோ, அவர்களே வென்றவர்கள்.

 

"பாப மேலா ந களதா,

நவ்ஹதீ ஸம்ஸாராசீ சிந்தா". (௧)

 

 

(தந்தை காலமானதால்), மஹாராஜிற்கு தாங்க முடியாத துக்கம் ஏற்பட்டது. இந்தத் துக்கம் ஏதோ கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து வரும்போது, மறு வருஷம், பிரியமான மாதா கனகாயியும், மஹாராஜ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, காலமானார்.

 

"மாதா மேலீ மஜ தேகதா". (௧)

 

மஹாராஜிற்கு, துக்கம் என்ற மலை இடிந்து, மேலே விழுந்தது போலாயிற்று. மாதா, மஹாராஜிற்காக என்னவெல்லாம் செய்யவில்லை? எல்லாம் செய்தாள்.

 

"காய நாஹீ(ம்) மாதா கௌரவீத பாளா,

காய நாஹீ(ம்) லளா பாளீத தீ, (௧)

காய நாஹீ(ம்) த்யாசீ கரீதே ஸேவா,

காய நாஹீ(ம்) ஜீவா கோமடேதே, (௨)

அமங்களபணே காண்டாளா ந தரீ,

உசலோனி கரீ தரீ கண்டீ". (௩)

 

    இதன்பின், (மஹாராஜின்) ௧௮ வது வயதில், மூத்த ஸஹோதரர் ஸாவ்ஜீயின் பத்னி காலமானாள். ஆதியிலிருந்தே ஸாவ்ஜிக்கு உலகப் பற்று இருந்தது கிடையாது. அவர், பத்னியின் மறைவிற்குப் பின்னர், வீட்டுப் பொறுப்பை விட்டுவிட்டு, தீர்த்த யாத்ரை போனார்; போனவர் போனவர்தான். குடும்பத்தின் நான்கு உறுப்பினர்கள் போய் விட்டார்கள். இதனால், ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்த மஹாராஜிற்கு, இப்போது எல்லாமே போய்விட்டது போலாயிற்று.

 

மஹாராஜ் தன்னுடைய தன்னம்பிக்கையைக் குறைவடைய விடவில்லை. உதாஸீனத்துடன் இருந்தாலும், தனது ௨0 வது வயதில், ப்ரபஞ்சத்தை எதிர்நோக்கும் நம்பிக்கையைக் கைக்கொண்டார். இருந்தும் என்ன ஆயிற்று? ௨௧ வது வயதில், விபரீதமானா காலம் வந்துற்றது. நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அது மிகப் பயங்கரமாக இருந்தது. கி.பி. ௧௬௨௯ (சக வருஷம் ௧௫௫0-௫௧) மழை பெய்ய காலம் தாழ்ந்தது. அதன்பின் மிகவும் பெருமழை பெய்தது. இப்போதும் ஜனங்களுக்கு (நற்காலம் பிறக்கும் என்ற) நம்பிக்கை இருந்தது. கி.பி ௧௬௩0 வது வருஷத்தில் வறட்சி ஏற்பட்டது. எல்லோரும் அவதியுற்றனர். தான்யங்களின் விலை கடகடவென உயர்ந்தது. தீவனம் இல்லாமல் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மரித்தன. அன்னமில்லாமல் ஆயிரக்கணக்கான ஜனங்கள் இறந்தார்கள். பெரிய குடும்பங்கள் மண்ணோடு மண்ணாயின. இதுவரை இம்மாதியான துர்தசை வந்ததில்லை.

 

    கி.பி.௧௬௩௧ மத்தியில் இந்த எதிர்பாராத ஆபத்து நேர்ந்தது. பெரும் மழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர சேதம் உண்டுபண்ணியது. இவ்விதமான எதிர்பாராத ஆபத்தினால் ஏற்பட்ட கெட்டகாலம் மூன்று வருஷம் நீடித்தது. அதன்பின் பயங்கரமான தொற்றுநோய்கள் பரவின. விலவாசிகள் உயர்ந்தன. நான்கு சேர் ரத்தினம் கொடுத்தாலும், நான்கு சேர் உளுந்து கிடைக்காது. பஞ்சத்தின் கடுமையால் ஏற்பட்ட இந்த மோசமான விளைவுகளைப் பற்றி மஹிபதிபாபா கூறுகிறார்:

 

"பர்ஜன்ய நி:சேஷ கேலா தேணே(ம்),

சார்யாவீண பைல மேலே". (௧)

"மஹாகாள படீலா பூர்ண,

ஜாஹாலீ தாரண சேராசீ,

தே ஹீ ந மிளே கோணா ப்ரதீ,

ப்ராணீ ம்ருத்யுஸதனீ(ம்) ஜாதீ". (௧)

"துஷ்காளே(ம்) ஆடிலே த்ரவ்ய மான".

 

    இந்தப் பஞ்சத்தினால் மஹாராஜின் உலகம், முழுவதுமாக அழிந்தது. பசுக்களும் எருமைகளும் இறந்தன. கொடுக்கல்-வாங்கல் தொழில் மூழ்கிப் போயிற்று. வியாபாரம் படுத்துவிட்டது. மக்கள் மத்தியில் இருந்த மதிப்பும் போய்விட்டது. மூத்த மனைவி ரகுமாபாயியையும், ஒரே செல்லப் பிள்ளையுமான ஸந்தோபாவையும் பஞ்சம் பலி கொண்டது. வியாபாரிகளும், வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களும் பஞ்சகாலத்தை ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொள்வது கண்கூடு. செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, லாபம் சம்பாதிக்கும் கெட்ட புத்தி உள்ளவர்களை இப்போதும் நாம் காணலாம்.

 

    பஞ்சகாலத்தில், மக்களிடமிருந்து (கடன் கொடுத்த பணத்தை) வசூல் செய்யும் கடினமான இதயம் துகாராம் மஹாரஜிற்கு இருக்கவில்லை. மாறாக, தன்னுடைய மோசமான நிலமை, ஆபத்து, துக்கம் ஆகியவற்றை மறந்து, ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, பஞ்சத்தினால் பீடிக்கப்பட்டுத் துன்புறும் ஜனங்களுக்கு தாராளமாக உதவி செய்தார்.

 

"ஸஹஜ ஸரலே ஹோதே கா(ம்)ஹீ(ம்),

த்ரவ்ய தோடேபஹு தேஹீ,

- - - திலே(ம்) த்விஜா யாசகா". (௪)

 

    இருப்பதில், ஏதாவது கொஞ்சம் பணத்தை எதுத்துக்கொண்டு சுற்றப் போவார். அதை பிராமணர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் தாராளமாகக் கொடுத்துவிடுவார். (இந்த ஸம்பவங்களால், துகாராம் மஹாராஜ் தன்னை திவாலாக்கிக் கொண்டார் என எண்ணக் கூடாது).

௫. ஸாக்ஷாத்காரம் கிடைத்தது.