|
பொருட்செறிவுள்ள சரித்திர,
சமூக, வேதாந்த நூற்களின் குறிப்பிட்ட பகுதிகள் முதலியவற்றை,
இந்த இலக்கியத் திரட்டில் சேர்த்துக் கொள்ளும் நடைமுறையப்
பின்பற்றி வருகிறோம். உலகப் புகழ் பெற்றது என்பதற்காகவோ
அல்லது சமீபத்தில் கண்டறியப்பட்டது என்பதற்காகவோ, ஒரு
தனிப்பட்ட விஷயத்தை மட்டும் எடுத்துக் காட்டும் எந்தப்
பகுதியும் இதில் சேர்க்கப்படவில்லை - இவைகள் (தொகுப்பில்
உள்ளவைகள்) நிச்சயமாகப் படிக்கத் தூண்டுபவையே.
-டேவிட்
தாம்ரோச்.
பதினேழாவது நூற்றாண்டின் முற்பகுதியில், மேற்கு இந்தியாவில்
வாழ்ந்து, மராட்டி மொழியில் (பாடல்கள்) இயற்றிய துகாராம்,
பல கவிகளின் இலக்கிய முயற்சிக்கு ஊக்கம் கொடுத்தவர் ஆவார்.
தன்னைப் பற்றிக் கூறும் பாடல் ஒன்றில் அவரே, "எனக்கென்று
சொந்தமாக எந்தத் திறமையும் கிடையாது. என்னைப் பேசவைப்பது
ஸர்வ வியாபியே" (பகவானே), என்று வியந்து கூறுகிறார்.
ஸ்ரீ
திலீப் புருஷோத்தம் சித்ரே அவர்களால் மொழி பெயர்க்கப்
பட்டது: துகாராம், மத்திய இந்தியாவில், தற்பொழுது
மஹாராஷ்ட்ரா என வழங்கப்படும் மாநிலத்தில், ஒரு கிராமத்தில்,
நிலம் படைத்த விவசாயிகளான பெற்றோர்களுக்குப் பிறந்தவர்.
அவருக்கு இருபது வயது ஆவதற்கு முன்பே, பஞ்சமும், நோயும்
அவருடைய பெற்றோர்களையும், (இரு மனைவியரில்) ஒரு மனைவியையும்
பலி கொண்டன. அப்போது, அவர் இவ்வுலகைத் துறந்தவரானார்.
மிகவும் தனித்தன்மை வாய்ந்த அவருடைய பாடல்கள்
மஹாராஷ்ட்ராவில் பண்டரிபுரத்திலுள்ள விட்டல் என்ற பெயரால்
வணங்கப்படும் விஷ்ணுவின் மீது பாடப் பட்டதாகும்.
நாம்தேவ்
மஹாராஜும், பாண்டுரங்கனும் துகோபாவின் கனவில் வந்து,
அபங்கம் பாடும்படி ஆக்ஞாபித்தல்.
(௧)
நாமதேவே(ம்)
கேலே(ம்) ஸ்வப்னாமாஜீ ஜாகே(ம்),
ஸவே(ம்)
பாண்டுரங்கே(ம்) யேவூனியா(ம்). (௧)
ஸாங்கிதலே(ம்)
காம கராவே(ம்) கவித்வ,
வாவுகே(ம்)
நிமித்ய போலோ(ம்) நகோ. (த்ரு
மாப டாகீ ஸள
தரிலீ விட்டலே(ம்),
தாபடோனீ
கேலே(ம்) ஸாவதான. (௨)
ஸாங்கிதலே(ம்)
காம கராவே(ம்) கவித்வ,
வாவுகே(ம்)
நிமித்ய போலோ(ம்) நகோ. (த்ரு)
ப்ரமாணாசீ
ஸங்க்யா ஸாங்கே சத கோடீ,
உரலே தே
சேவடீ(ம்) லாவீ துகா. (௩)
ஸாங்கிதலே(ம்)
காம கராவே(ம்) கவித்வ,
வாவுகே(ம்)
நிமித்ய போலோ(ம்) நகோ. (த்ரு)
துகாராம்
மஹாராஜ் சொல்லுகிறார், "விட்டலன், நாமதேவருடன் எனது கனவில்
வந்து, என்னை எழுப்பி, "அபங்கம் இயற்றும் காரியத்தைச்
செய்வாயாக. மற்ற வீணானவற்றைப் பேச வேண்டாம்", என்று
சொன்னான். விட்டலன், (இயற்ற வேண்டிய அபங்கத்தின்)
எண்ணிக்கையைப் பற்றி என்னை ஜாக்கிரதையாக இருக்கும்படி
கவனப்படுத்தினான். இயற்ற வேண்டிய நூறு கோடி அபங்கங்களில் (நாம்தேவ்
இயற்றியது போக) மீதியை நான் இயற்றி, பூர்த்தி செய்தேன்".
(௨)
த்யால டாவ
தரீ ராஹேன ஸங்கதீ,
ஸந்தா(ம்)சே
பங்கதீ பாயா(ம்)பாசீ(ம்). (௧)
ஆவடீசா டாவ
ஆலோ(ம்)ஸே(ம்) டாகூன,
ஆதா(ம்)
உதாஸீன ந தராவே(ம்). (த்ரு)
சேவடீல ஸ்தள
நீச மாஜீ வ்ருத்தி,
ஆதாரே(ம்)
விஸ்ராந்தீ பாவயீன. (௨)
ஆவடீசா டாவ
ஆலோ(ம்)ஸே(ம்) டாகூன,
ஆதா(ம்)
உதாஸீன ந தராவே(ம்). (த்ரு)
நாமதேவாபாயீ(ம்) துக்யா ஸ்வப்னீ(ம்) பேடீ,
ப்ரஸாத ஹா
போடீ(ம்) ராஹிலாஸே. (௩)
ஆவடீசா டாவ
ஆலோ(ம்)ஸே(ம்) டாகூன,
ஆதா(ம்)
உதாஸீன ந தராவே(ம்). (த்ரு)
துகோபாராய் சொல்லுகிறார், "(ஸந்த)ஸங்கத்தில் இருக்க இடம்
அருளியதால், உன்னைப் போல ஸந்துக்களின் வரிசையில்,
அவர்களுடைய சரணங்களுக்கு பக்கத்தில் இருப்பேன். நான்,
எனக்கு இஷ்டமான இடத்தை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறேன்.
இப்போது என்னை உதாஸீனம் செய்யாதே. (ஸமூகத்தில்) எனது இடம்
கீழானது, எனது சக்தியும் அல்பமானது. ஆனால், உனது
ஆதாரத்தினால், எனக்கு நிம்மதி உண்டாகும். கனவில்,
நாம்தேவின் சரணங்களைத் தரிசித்ததால் எனக்கு (அபங்கம்
இயற்றும்) பிரஸாதம் கிடைத்தது".
(௩)
கரூ(ம்)
கவித்வ ஆதா(ம்) காய நாஹீ(ம்) லாஜ,
மஜ பக்தராஜ
ஹா(ம்)ஸதீல. (௧)
ஆதா(ம்) ஆலா
ஏகா நிவாட்யாசா திஸ,
ஸத்யாவிண ரஸ
விரஸலா. (த்ரு)
அனுபவாவிண
கோண கரீ பாப,
ரிதேசி
ஸங்கல்ப லாஜவாவே. (௨)
ஆதா(ம்) ஆலா
ஏகா நிவாட்யாசா திஸ,
ஸத்யாவிண ரஸ
விரஸலா. (த்ரு)
துகா ம்ஹணே
ஆதா(ம்) ந தரவே தீர,
நவ்ஹே ஜீவ
ஸ்திர மாஜா மஜ. (௩)
ஆதா(ம்) ஆலா
ஏகா நிவாட்யாசா திஸ,
ஸத்யாவிண ரஸ
விரஸலா. (த்ரு)
துகாராம்
மஹாராஜ் கூறுகிறார், "(தேவா! உன்னை அடையும் அனுபூதி இல்லாத)
அபங்கங்களைப் பாட ஏன் எனக்கு வெட்கமாக இல்லை? [நான்
அப்படிப்பட்ட அபங்கங்களைப் பாடினால், (ஞானேஸ்வர மாவுலி,
நாம்தேவ் ஆகிய)] பக்தராஜர்கள் என்னைப் பரிகசிப்பார்களே.
இப்போது அதற்கு ஒரு முடிவு வரும் நாள் வந்துள்ளது.
ஸத்யமில்லாத (தெய்வப்ராப்திக்கான அனுபூதி இல்லாத) (காவ்ய)
ரஸம் விரஸமாகும். அனுபூதி இல்லாத காவியத்தைப் படைக்கும்
பாவத்தை யார்தான் செய்வார்கள்? வியர்த்தமானவற்றைப் படைக்க
வெட்கப்பட வேண்டும். இப்போது என்னிடம் அந்தத் தைரியம் இல்லை.
(பகவத் அனுபவம் இல்லாமல்) எனக்கு அப்படிப்பட்ட (கவி
புனையும்) மன நிச்சயம் வராது".
(௪)
பாவாவே(ம்)
ஸந்தோஷ,
து(ம்)ஹீ
யாஸாடீ(ம்) ஸாயாஸ. (௧)
கரீ(ம்) ஆவடீ
வசனே(ம்),
பாலடூனீ
க்ஷணக்ஷணே(ம்). (த்ரு)
த்யாவே(ம்)
அபயதான,
பூமீ(ம்) ந
படாவே(ம்) வசன. (௨)
கரீ(ம்) ஆவடீ
வசனே(ம்),
பாலடூனீ
க்ஷணக்ஷணே(ம்). (த்ரு)
துகா ம்ஹணே
பரஸ்பரே(ம்),
கா(ம்)ஹீ(ம்)
வாடவீ(ம்) உத்தரே(ம்). (௩)
கரீ(ம்) ஆவடீ
வசனே(ம்),
பாலடூனீ
க்ஷணக்ஷணே(ம்). (த்ரு)
துகோபாராய் கூறுகிறார், "தேவா! நீ ஸந்தோஷம் அடையவேண்டும்
என்றே நான் (அபங்கம்) பாடும் காரியத்தில் இறங்கியுள்ளேன்.
உனக்குப் பிரியமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு க்ஷணமும்
மாற்றி மாற்றிப் (பல வகையாகப்) பாடுகிறேன். (என்னுடைய குரல்)
பூமியில் விழாது (வீணாகாது) என்று அபயதானம் அளிப்பாயாக. (நம்மிடையில்)
பரஸ்பரம் ஏதாவது பிரேம ஸம்பாஷணை வளர்ந்து கொண்டே
இருக்கட்டும்".
(௫)
கா(ம்)ஹீ(ம்)ச ந லகே ஆதி அவஸான,
பஹுத கடிண
திஸதஸா(ம்). (௧)
அவக்யாச
மாஜ்யா வேஞ்சவில்யா சக்தி,
ந சலேஸீ
யுக்தி ஜாலீ புடே(ம்). (த்ரு)
போலிலே(ம்)
வசன ஹாரபலே(ம்) நபீ(ம்),
உதரலோ(ம்)
தோ(ம்) உபீ(ம்) ஆஹோ(ம்) தைஸீ(ம்). (௨)
அவக்யாச
மாஜ்யா வேஞ்சவில்யா சக்தி,
ந சலேஸீ
யுக்தி ஜாலீ புடே(ம்). (த்ரு)
துகா ம்ஹணே
கா(ம்)ஹீ(ம்) ந கராவே(ம்)ஸே(ம்) ஜாலே(ம்),
தகிதசி
டேலே(ம்) சித்த உகே(ம்). (௩)
அவக்யாச
மாஜ்யா வேஞ்சவில்யா சக்தி,
ந சலேஸீ
யுக்தி ஜாலீ புடே(ம்). (த்ரு)
துகோபா
சொல்லுகிறார், "தேவா! (உன் மனம் இளகாதா என்று) ஆதிமுதல்
அந்தம் வரை முயன்று பார்த்து விட்டேன். ஆனால், முடிவு
தெரியவில்லை. ஆகையால், நீ மிகவும் கடின சித்தம் உடையவனாகத்
தோன்றுகிறாய். என் முழு பலமும் தீர்ந்து விட்டது. என்னுடைய
எந்த யுக்தியும் உன்னிடம் பலிக்கவில்லை. இன்றுவரை நான்
பேசிய பேச்செல்லாம் ஆகாயத்தில் கரைந்து விட்டது. நான்
மாத்திரம் (உன் முன்னால் கை கூப்பி) முன் போலவே நிற்கிறேன்.
நீ ஒன்றும் செய்யாததினால் (உன் கடின சித்தத்தினால்) என்
மனம் ஆச்சரியம் அடைந்து, பேச்சற்றுப் போய்விட்டது".
(௬)
கரிதோ(ம்)
கவித்வ ம்ஹணால ஹே(ம்) கோணீ,
நவ்ஹே மாஜீ
வாணீ பதரீ(ம்)சீ. (௧)
மாஜீயே
யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,
மஜ
விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
காய மீ பாமர
ஜாணே(ம்) அர்தபேத,
வதவீ
கோவிந்த தே(ம்)சி வதே(ம்). (௨)
மாஜீயே
யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,
மஜ
விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
நிமித்த
மாபாஸீ பைஸவிலோ(ம்) ஆஹே(ம்),
மீ தோ(ம்)
கா(ம்)ஹீ(ம்) நவ்ஹே ஸ்வாமிஸத்தா. (௩)
மாஜீயே
யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,
மஜ
விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
துகா ம்ஹணே
ஆஹே(ம்) பாயீகசி கரா,
வாகவிதா
முத்ரா நாமாசீ ஹே.
மாஜீயே
யுக்தீசா நவ்ஹே ஹா ப்ரகார,
மஜ
விஷ்வம்பர போலவிதோ. (த்ரு)
துகாராம்
மஹாராஜ் சொல்லுகிறார், "நான் அபங்கம் இயற்றுவதாக யார்
சொன்னார்கள்? இந்த காவ்யவாணி என்னுடையதல்ல. இது எனது
யுக்தியின்படி நிகழ்ந்ததன்று. என்னை அந்த விஷ்வம்பரனே (விஷ்வம்பரன்
= உலகைப் போஷிப்பவன்) சொல்ல வைக்கிறான். பாமரனாகிய நான் (சாஸ்த்திரங்களின்)
அர்த்த பேதங்களை எவ்வாறு அறிவேன்? கோவிந்தன் சொல்லும்படிச்
சொன்னதைச் சொல்லுகிறேன். அபங்கம் எழுதி, எண்ணிக்கையை
நிறப்புவற்காக என்னை உட்கார வைத்திருக்கிறான். அதைப் பற்றி
நான் ஒன்றும் அறியேன். ஸர்வமும் ஸ்வாமியின் ஆணையின்
பிரகாரமே நடைபெறுகின்றன. நான் (விட்டலனின்) உண்மையான
தாஸனாக இருந்து, அவனது நாம முத்திரையைத் தாங்குகிறேன்".
(௭)
நாஹீ(ம்)
ஸரோ(ம்) யேத ஜோடில்யா வசனீ(ம்),
கவித்வாசீ
வாணீ குஷளதா. (௧)
ஸத்யாசா
அனுபவ வேதீ ஸத்யபணே(ம்),
அனுபவாச்யா
குணே(ம்) ருசோ(ம்) யேதே(ம்). (த்ரு)
காய
ஆகீபாஷீ(ம்) ஸ்ருங்காரிலே(ம்) சாலே,
போடீ(ம்)சே(ம்) உகலே கஸாபாசீ(ம்). (௨)
ஸத்யாசா
அனுபவ வேதீ ஸத்யபணே(ம்),
அனுபவாச்யா
குணே(ம்) ருசோ(ம்) யேதே(ம்). (த்ரு)
துகா ம்ஹணே
யேதே(ம்) கராவா உகல,
லாகேசி நா
போல வாடவூனி.
ஸத்யாசா
அனுபவ வேதீ ஸத்யபணே(ம்),
அனுபவாச்யா
குணே(ம்) ருசோ(ம்) யேதே(ம்). (த்ரு)
துகாராம்
மஹாராஜ் சொல்லுகிறார், "வெறும் வார்தைகளை மட்டும் கோர்த்து,
கவி இயற்றினால், அது பகவானுக்கு ஸந்தோஷத்தை அளிக்காது.
அதனால், ஆன்மீக முன்னேற்றமும் கிடைக்காது. அதில் அனுபவ
ஸித்தாந்தங்களின் அனுபூதி நிறைந்திருந்தால், அந்த
அனுபவத்தின் குணங்கள் (உலகினருக்கு) ருசிக்கும் (பயன்படும்).
தங்க முலாம் பூசி அலங்கரிக்கப்பட்ட செப்புக் கம்பியை,
நெருப்பில் காட்டினால், முலாம் அழிந்து, செம்பே தென்படும்.
அதுபோல அனுபவசாலியின் முன் மற்றவர்களின் சாயம்
வெளுத்துவிடும். உண்மையான அனுபூதி உள்ளவர்களுக்கு, அதை
மற்றவர்களுக்கு காண்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை".
(௮)
பாப மேலா ந
களதா(ம்),
நவ்ஹதீ
ஸம்ஸாராசீ சிந்தா. (௧)
விடோ துஜே(ம்)
மாஜே(ம்) ராஜ்ய,
நாஹீ(ம்)
துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
பாயீல மேலீ
முக்த ஜாலீ,
தேவே(ம்)
மாயா ஸோடவிலீ. (௨)
விடோ துஜே(ம்)
மாஜே(ம்) ராஜ்ய,
நாஹீ(ம்)
துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
போர மேலே(ம்)
பரே(ம்) ஜாலே(ம்),
தேவே(ம்)
மாயாவிரஹித கேலே(ம்). (௩)
விடோ துஜே(ம்)
மாஜே(ம்) ராஜ்ய,
நாஹீ(ம்)
துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
மாதா மேலீ
மஜ தேகதா(ம்),
துகா ம்ஹணே
ஹரலீ சிந்தா. (௪)
விடோ துஜே(ம்)
மாஜே(ம்) ராஜ்ய,
நாஹீ(ம்)
துஸர்யாசே(ம்) காஜ. (த்ரு)
துகாராம்
மஹாராஜ் சொல்லுகிறார், "எனக்கு உலகத்தைப் பற்றிய சிந்தனை
இல்லாத போது (சிறு வயதில்) எனது தந்தை இறந்ததால், அது
எனக்குத் தெரியாது. விட்டலா! இப்போது, உனதும் எனதுமே
ராஜ்யம். வேறு வேலை எதுவும் கிடையாது. பத்னி காலமாகி,
விடுதலை அடைந்தாள். பகவான் என்னை மாயையிலிருந்து நீக்கினான்.
புதல்வன் மரித்தான். (ஒரு வகையில்) அதுவும் நல்லதாயிற்று.
பகவான் எனக்கு மாயை இல்லாமல் செய்துவிட்டான். நான்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே தாயார் காலமானாள். பகவான்
என்னுடைய ஸகல கவலைகளையும் போக்கிவிட்டான்".
(௯)
(ஸந்துக்கள்
துகாராம் மஹாராஜிடம் "உங்களுக்கு வைராக்கியம் எப்படி வந்தது",
என்று கேட்டபோது அவர் அளித்த பதில்).
யாதீ சூத்ர
வம்ச கேலா வேவஸாவ,
ஆதி தோ ஹா
தேவ குளபூஜ்ய. (௧)
நயே போலோ(ம்)
பரி பாளிலே(ம்) வசன,
கேலியாசா
ப்ரச்ன து(ம்)ஹீ(ம்) ஸந்தீ(ம்). (௨)
ஸம்வஸாரே(ம்)
ஜாலோ(ம்) அதிது:கே(ம்) து:கீ,
மாயபாப
ஸேகீ(ம்) க்ரமிலியா. (௩)
துஷ்காளே(ம்)
ஆடிலே(ம்) த்ரவ்ய நேலா மான,
ஸ்த்ரீ ஏகீ
அன்ன அன்ன கரிதா(ம்) மேலீ. (௪)
லஜ்ஜா வாடே
ஜீவ த்ராஸலோ(ம்) யா து:கே(ம்),
வேவஸாவ
தேகே(ம்) துடீ யேதா(ம்). (௫)
தேவாசே(ம்)
தேவுள ஹோதே(ம்) ஜே(ம்) பங்கலே(ம்),
சித்தாஸீ
தே(ம்) ஆலே(ம்) கராவே(ம்)ஸே(ம்). (௬)
ஆரம்பீ(ம்)
கீர்தன கரீ(ம்) ஏகாதசீ,
நவ்ஹதே(ம்)
அப்யாஸீ(ம்) சித்த ஆதீ(ம்). (௭)
காஹீ(ம்)
பாட கேலீ(ம்) ஸந்தா(ம்)சீ(ம்) உத்தரே(ம்),
விஸ்வாஸே(ம்)
ஆதரே(ம்) கரோனியா(ம்). (௮)
காதீ புடே(ம்)
த்யா(ம்)சே(ம்) தராவே(ம்) த்ருபத,
பாவே(ம்)
சித்த சுத்த கரோனியா(ம்). (௯)
ஸந்தா(ம்)சே(ம்) ஸேவிலே(ம்) தீர்த பாயவணீ,
லாஜ நஹீ(ம்)
மனீ(ம்) யேவூ(ம்) திலீ. (௧0)
டாகலா தோ
கா(ம்)ஹீ(ம்) கேலா உபகார,
கேலே(ம்)
ஹே(ம்) சரீர கஷ்டவூனீ. (௧௧)
வசன
மானிலே(ம்) நாஹீ(ம்) ஸுஹ்ருதா(ம்)சே(ம்),
ஸமூள
ப்ரபஞ்சே(ம்) வீட ஆலா. (௧௨)
ஸத்ய
அஸத்யாஸீ மன கேலே(ம்) க்வாஹீ,
மானியேலே(ம்)
நாஹீ(ம்) பஹுமதா(ம்). (௧௩)
மானியேலா
ஸ்வப்னீ(ம்) குரூசா உபதேச,
தரிலா
விஸ்வாஸ த்ருட நாமீ(ம்). (௧௪)
யாவரீ யா
ஜாலீ கவித்வாசீ ஸ்பூர்தி,
பாய தரிலே
சித்தீ(ம்) விடோபாசே. (௧௫)
நிஷேதாசா
கா(ம்)ஹீ(ம்) படிலா ஆகாத,
தேணே(ம்)
மத்யே(ம்) சித்த து:கவிலே(ம்). (௧௬)
புடவில்யா
பஹ்யா பைஸலோ(ம்) தரணே(ம்),
கேலே(ம்)
நாரயணே(ம்) ஸமாதான. (௧௭)
விஸ்தாரீ(ம்)
ஸாங்கதா(ம்) பஹுத ப்ரகார,
ஹோயீல உசீர
ஆதா(ம்) புரே. (௧௮)
ஆதா(ம்) ஆஹே
தைஸா திஸதோ விசார,
புடீல
ப்ரகார தேவ ஜாணே. (௧௯)
பக்தா(ம்)
நாராயண நுபேக்ஷீ ஸர்வதா,
க்ருபாவந்த
ஐஸா களோ(ம்) ஆலே(ம்). (௨0)
துகா ம்ஹணே
மாஜே(ம்) ஸர்வ பாண்டவல,
போலவிலே போல
பாண்டுரங்கே(ம்). (௨௧)
துகாராம்
மஹாராஜ் கூறுகிறார், "எனது ஜாதி சூத்திர வம்சம், தொழில்
வியாபாரம், முதலிலிருந்தே குலத்திற்குத் தெய்வமாக
இருப்பவனைப் (விட்டலனை) பூஜித்து வருகிறேன். (௧) நானே
என்னுடைய வரலாற்றை யாருக்கும் சொல்லுவதில்லை.
ஸந்துக்களாகிய நீங்கள் கேட்டதால், உங்களுடைய கட்டளைக்குக்
கீழ்ப்படிகிறேன். (௨) நான் இப்பிரபஞ்சத்தில், துக்கத்தின்
அதிதுக்கத்தை அனுபவித்திருக்கிறேன். தாய், தந்தையர் உலகை
விட்டுப் போய்விட்டனர். (௩) பஞ்சத்தினால் செல்வத்தை
இழந்தேன். அதனால், மானமும் அழிந்தது. ஒரு மனைவி "அன்னம்,
அன்னம்" என்று சொல்லிக்கொண்டே மரித்தாள். (௪) இந்த
துக்கங்களினால் மிகவும் வெட்கம் அடைந்தேன். வாழ்க்கை
பயமுள்ளதாயிற்று. வியாபாரத்தைப் பார்த்தால், படுத்துவிட்டது.
(௫)
விட்டலனின்
ஆலயம் பழுதடைந்து போய் விட்டது. அதைப் புதுப்பிக்க வேண்டும்
என்று மனதில் பட்டது. (௬) ஆரம்பத்தில், ஒருநாள் கீர்த்தன்
செய்தேன். முதலில் பயிற்சியில் மனம் நாடவில்லை. (௭)
ஸந்துக்களின் வசனத்தில் நம்பிக்கை வைத்து, பக்தியுடன் (அவ்வசனங்களைப்)
படித்தேன். (௮) அதன் பின், சித்தத்தைச் சுத்தமாக வைத்துக்
கொண்டு, பாவத்துடன் அவர்களின் த்ருபதங்களை (பல்லவிகளை)
பாடினேன். (௯) ஸந்துக்களின் பாத தீர்த்தத்தைப் பருகினேன்.
அதனால், மனதில் வெட்கம் போய்விட்டது. (௧0)
என்
சரீரத்தைக் கஷ்டப் படுத்திக்கொண்டு, ஏதோ (மற்றவர்களுக்கு)
உபகாரம் செய்தேன். (௧௧) நெருங்கியவர்கள் (மற்றவர்களைப் போல
இரு என்று) சொன்னதை, நான் மதிக்கவில்லை. மொத்த
பிரபஞ்சத்தின் மீதும் வெறுப்பு வந்தது. (௧௨) நல்லது எது?
கெட்டது எதுவென்ற விஷயத்தில் நான் உலகத்தினரின்
அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. என் மனதில் பட்டதையே
ஸாக்ஷியாகக் கொண்டேன். (௧௩) சொப்பனத்தில் குரு செய்த
உபதேசத்தை மதித்து, அந்த நாமத்தில் திடமான நம்பிக்கை
வைத்தேன். (௧௪) அதன் பின்னர், கவி புனையும் ஆற்றல் (விட்டோபாவின்
அருளினால்) கிடைத்தது. நான் விடோபாவின் சரணங்களில் மனதை
பதித்துக் கொண்டேன். (௧௫)
எனது
அபங்கங்கள் நிந்திக்கப் பட்டு, ஆபத்து ஏற்பட்டது. அதனால்
மனம் துயருற்றேன். (௧௬) (நான் இயற்றிய அபங்கங்கள்
எழுதப்பட்ட) புஸ்தகங்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டன. நான்
’தர்ணா’வில் அமர்ந்தேன். (அவற்றை ரக்ஷித்து) நாராயணன் என்னை
ஸமாதானப் படுத்தினான். (௧௭) (இந்த விஷயங்களை) இன்னும்
பலபடியாக விஸ்தரித்துக் கூறினாலும், பின்னும் மீதி
இருக்கும். ஆகையால், இப்போது நிறுத்திக் கொள்வோம். (௧௮)
இப்போதுள்ள நிலமை தெரிகிறது. ஆனால், மேற்கொண்டு நடக்கப்
போவதை பகவானே அறிவான். (௧௯) நாராயணன் தன் பக்தர்களை
ஒருபொழுதும் அசட்டை செய்ய மாட்டான். அவன் கிருபாவந்தன்
என்பதை நான் தெரிந்து கொண்டேன். (௨0) பாண்டுரங்கனே எனது
பொக்கிஷம், அவன் தனது வாக்குகளை என் வாயால் சொல்ல
வைக்கிறான். (௨௧)
"துகாராம்
மஹாராஜின் ’காதா’ (அபங்கங்களின் தொகுப்பு), அர்த்த
புஷ்டியுள்ள, ஒரு மஹோன்னதமான படைப்பாகும். அவருடைய
இலக்கியப் படைப்புகள் மனித சமுதாயத்தின் முடிவற்ற இலக்கிய
தாகத்திற்குக் கிடைத்த ஒரு நிபுணத்துவம் வாய்ந்த,
பாரம்பரிய சொத்தாகும். துகாராம் மஹாராஜின் திறமை லௌகீகத்தை,
பரமார்த்திகமாக மற்றுவதே ஆகும். அவருடைய அபங்கங்களில், முழு
உலகமே அர்த்தமுள்ளதாக மாறி விடுகிறது. அவைகள், மராட்டிய
கலாசாரத்தின் மற்றும் மராட்டிய மொழியின் ஒரு குறிப்பிட்ட
காலகட்டத்தில் இயற்றப்படிருந்தாலும், உலகத்தினர்
அனைவருக்கும் பொதுவானதாகவும், காலவரையறை இன்றி, மனித இனம்
பின்பற்றத் தக்கதாகவும் உள்ளது.
- ஸ்ரீ
திலீப் புருஷோத்தம் சித்ரே எழுதிய புன்ஹா துகாராம் (மறுபடியும்
துகாராம்) என்ற நூலிலிருந்து.
|