|
ஸுக வாடே துஜே வர்ணிதா(ம்) பவாடே,
ப்ரேம மிடீ படே வதனாஸீ. (௧)
வ்யாலே தோன்ஹீ பக்ஷீ ஏகா
வ்ருக்ஷாவரீ,
ஆலா துராசாரீ பாரதீ தோ. (௨)
வ்ருக்ஷாசியா மாதா(ம்) ஸோடிலா ஸஸாணா,
தனுஷ்யாஸி பாணா லாவியேலே(ம்). (௩)
தயே காளீ(ம்) துஜ பக்ஷீ ஆடவிதீ,
தா(ம்)வே கா ஸ்ரீபதீ மாயபாபா. (௪)
உடோனியா(ம்) ஜாதா(ம்) ஸஸாணா மாரீல,
பைஸதா(ம்) விந்தீல பாரதீ தோ. (௫)
ஐகோனியா(ம்) தா(ம்)வா தயா(ம்)
பக்ஷியா(ம்)சா,
தரிலா ஸர்பாசா வேஷ வேகீ(ம்). (௬)
டங்கோனி பாரதீ பூமீஸீ பாடிலா,
பாண தோ லாகலா ஸஸாண்யாஸீ. (௭)
ஐஸா தூ(ம்) க்ருபாளு ஆபுலியா தாஸா,
ஹோஸீல கோ(ம்)வஸா ஸங்கடீ(ம்)சா. (௮)
துகா ம்ஹணே துஜீ கீர்தி த்ரிபுவனீ(ம்),
வேதாசியே வாணீ வர்ணவேனா. (௯)
(விட்டலா!) உன்னை வர்ணித்துப்
பாடினால், பிரேமையினால் வாய் இனிக்கிறது, (மனதில்) ஸுகம் உண்டாகிறது. (௧) ஒரு
மரத்தில் இரண்டு பறவைகள் உட்கார்ந்திருந்தன. அப்போது கொடூரமான வேடன் ஒருவன் அங்கே
வந்தான். (௨) (பறவைகள் மேலே பறந்து தப்பிக்காமல் இருக்க, தன் கையிலிருந்த, சிறு
பறவைகளைப் பிடிக்கப் பழக்கப்பட்ட) ராஜாளிப் பறவையை மரத்தின் மீது பறக்க விட்டான்.
கையில் வில்லும் அம்பும் எடுத்துக் குறி வைத்தான். (௩) அப்போது பக்ஷிகள், "ஸ்ரீபதியே!
அம்மையப்பா! பறந்து போனால், ராஜாளி கொல்லும். உட்கார்ந்திருந்தால் வேடன் (அம்பெய்து)
கொல்லுவான். உடனே ஓடி வா. (எங்களைக் காப்பாற்று)", என்று உன்னைத் துதித்தன. (௪,௫)
நீ பக்ஷிகளின் குரலைக் கேட்டு உடனே (வந்து), ஒரு பாம்பாக உருவெடுத்தாய். (௬) வேடனைக்
கொத்தி, பூமியில் விழ வைத்தாய். (அவன் கையிலிருந்து விடுபட்ட) அம்பை, ராஜாளியின்
மீது தைக்க வைத்தாய். (௭) நீ தன்னுடைய பக்தர்களின் சங்கடங்களைத் தீர்க்கும் கிருபை
நிறைந்தவனாக இருக்கிறாய். (௮) துகாராம் மஹாராஜ் சொல்லுகிறார், "மூவுலகிலும்
பரவியுள்ள உனது கீர்த்தியை வேத வாணியாலும் வர்ணிக்க முடியாது".
காய துஜீ தோரீ வர்ணூ(ம்) மீ பாமர,
ஹோஸீ தயாகர க்ருபாஸிந்து. (௧)
துஜ ஐஸீ தயா நாஹீ(ம்) ஆணிகா(ம்)ஸீ,
ஐஸே ஹ்ருஷீகேசீ நவல ஏக. (௨)
குருக்ஷேத்ர பூமீவரீ பக்ஷீ வ்யாலே,
த்ருணாமாஜீ(ம்) கேலே(ம்) கோடே(ம்)
த்யா(ம்)னீ(ம்). (௩)
அகஸ்மாத் தேதே(ம்) ரணகாம்ப ரோவிலா,
யுத்தாசா நேமிலா டாவ தேதே(ம்). (௪)
கௌரவ பாண்டவ தளபர தோன்ஹீ,
ஜுஞ்ஜாவயா ரணீ(ம்) ஆலே தேதே(ம்). (௫)
தயே காளீ(ம்) துஜ பக்ஷீ ஆடவீதீ,
பாவ பா ஸ்ரீபதீ ம்ஹணோனியா(ம்). (௬)
ஹஸ்தீ கோடே ரத தேதே(ம்) தா(ம்)வதீல,
பாஷாண ஹோதீல சதசூர்ண. (௭)
ஐஸியே ஆகாந்தீ(ம்) வாஞ்சோ(ம்) கைஸே
பரீ,
தா(ம்)வ பா ஸ்ரீஹரீ லவலாஹே(ம்). (௮)
டாகோனியா(ம்) பிலீ(ம்) கைஸே(ம்)
ஜாவே(ம்) ஆதா,
பாவே(ம்) ஜகந்நாதா லவலாஹீ(ம்). (௯)
ஆலீ தியே காளீ(ம்) க்ருபா துஜ்யா
சித்தா,
அநாதா(ம்)ச்யா நாதா நாராயணா. (௧0)
ஏகா கஜாசியா கண்டீ(ம்) கண்டா ஹோதீ,
பாடிலீ அவசிதீ தயாவரீ. (௧௧)
அடரா திவஸ தேதே(ம்) த்வந்த்வயுத்த
ஜாலே(ம்),
வாரா ஊன லாகலே(ம்) நாஹீ(ம்) தயா(ம்).
(௧௨)
ஜுஞ்ஜ ஜால்யாவரீ தாவிலே(ம்) அர்ஜுனா,
து(ம்)ஹீ(ம்) நாராயணா பக்ஷியா(ம்)ஸீ.
(௧௩)
பாஹே(ம்) ஆபுலியா தாஸா(ம்) ம்யா(ம்)
ரக்ஷிலே(ம்),
ரணீ(ம்) வாஞ்சவிலே(ம்) கைஸா பரீ.
(௧௪)
ஐஸீ துஜ மாயா ஆபுல்யா பக்தா(ம்)சீ,
மாவுலீ ஆமுசீ துகா ம்ஹணே (௧௫)
(பாண்டுரங்கா!) தயகரனாக, கிருபைக்
கடலாக இருக்கும் உன்னுடைய பெருமையை, பாமரனான நான் எவ்வாறு வர்ணிப்பேன்? (௧) ரிஷிகேசா!
வேறு எவருக்கும் உன்னைப் போன்று இவ்வளவு தயை கிடையாது என்பது பிரசித்தம். (௨)
குருக்ஷேத்திர பூமியில், ஒரு பக்ஷி புல் தரையில் கூடுகட்டி (குஞ்சுகளுடன்) வசித்து
வந்தது. (௩) திடீரென்று, அந்த இடத்தை யுத்தகளமாகத் தேர்ந்தெடுத்து, யுத்தஸ்தம்பம்
நாட்டினார்கள். (௪) போர் செய்ய, கௌரவர்கள், பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் தமது
சைனியங்களுடன் அங்கே வந்தார்கள். (௫) யானைகள், குதிரைகள், ரதங்கள், ஆகியவைகள் (யுத்த
களத்தில்) ஓட ஆரம்பித்தன. கற்கள் எல்லாம் பொடிப் பொடியாயின. அப்போது பக்ஷி,
தந்தையாகவும், ஸ்ரீபதியாகவும் உள்ள உன்னை (சரண்) அடைவோம் என்று, (௬,௭) "இப்படிப்பட்ட
ஆபத்திலிருந்து எவ்வாறு தப்புவேன்? இப்போது, குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு எப்படிப்
போவேன்? ஜகந்நாதா! உன்னையே சரணடைந்தேன்", என்று துதித்தது. அநாதைகளின் நாதனே!
நாராயணா! அப்போது உனதுள்ளத்தில் (பக்ஷியிடத்தில்) கிருபை தோன்றியது. தந்தையே!
ஸ்ரீஹரி! நீஉடனே ஓடி வந்தாய். (௮,௯,௧0) (பக்ஷிகளை ரக்ஷிக்க) ஒரு யானையின் கழுத்தில்
இருந்த (பெரிய) மணியைப் பறித்து, அவைகளை மூடி வைத்தாய். (௧௧) அங்கே, ௧௮ நாட்கள்
அதிகோரமான யுத்தம் நடந்தது. (பக்ஷிகளின் மீது) காற்றோ, வெய்யிலோ படவில்லை. (௧௨)
நாராயணா! நீ, யுத்தம் முடிந்தவுடன், "என் பக்தர்களை யுத்த களத்திலிருந்து எப்படி
ரக்ஷித்துள்ளேன், பார்த்தாயா", என்று கூறி, அர்ஜுனனுக்கு பக்ஷிகளைக் காண்பித்தாய்.
(௧௩,௧௪) துகாராம் மஹாராஜ் கூறுகிறார், "பகவானே! நீ பக்தர்களின் பிரேமைக்குரியவன்.
எங்களுக்குத் தாயானவன்". |