|
|
|
|
|
|
|
|
சிறுவர் பகுதி |
|
|
|
|
வடிவமைப்பும், ஓவியமும்: ஸ்ரீ.
க்ஷிதிஜ திகளே.
மராட்டி - தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீ.
சாஸ்தாகோபால். |
|
|
|
 |
|
ஏக ப்ரேமகுஜ ஐகே(ம்) ஜகஜேடீ,
ஆடவலீ கோஷ்டீ ஸாங்கதஸே(ம்). (௧)
ஏக ம்ருகீ தோன்ஹீ பாடஸா(ம்)ஸஹித,
ஆனந்தே(ம்) சரத ஹோதீ வனீ(ம்). (த்ரு)
"ஹே ஜகஜேடி! (உலகின் முதல்வனே) பிரேமை
நிறைந்த உன்னுடைய ஒரு கதையை, நினைவில் உள்ளபடி, சொல்லுகிறேன். கேட்பாயாக. "ஒரு
பெண்மான், தன்னுடைய இரண்டு குட்டிகளுடன், காட்டில் ஆனந்தமாக, புல் மேய்ந்து
கொண்டிருந்தது. |
|
|
|
 |
|
அவசிதா(ம்) தேதே(ம்) பாரதீ பாதலா,
கேவூனியா(ம்) ஆலா ஸ்வானே(ம்) தோன்ஹீ.
(௨)
அப்போது, ஒரு வேடன் இரண்டு வேட்டை
நாய்களுடன், அங்கே வந்தான். |
|
|
|
 |
|
ஏகீகடே த்யாணே(ம்) சிரில்யா வாகுரா,
டேவிலே(ம்) ஸ்வானபுத்ரா(ம்) ஏகீகடே.
(௩)
(மான்களைக் கண்ட) அவன், ஒரு பக்கம்
வலையை விரித்துக் கட்டினான். மற்றொரு பக்கம், வேட்டை நாய்கள் இரண்டையும் நிறுத்தி
வைத்தான். |
|
|
|
 |
|
ஏகீகடே தேணே(ம்) வோணவா லாவிலா,
ஆபண ராஹிலா ஏகீகடே. (௪)
வேறொரு பக்கத்தில், தீயை மூட்டினான்.
நான்காவது பக்கத்தில், தான் போய் நின்றுகொண்டான்.
|
|
|
|
 |
|
சஹூ(ம்)கடோனியா(ம்) ம்ருகே(ம்)
வோடியேலீ(ம்),
ஸ்மரோ(ம்) தீ(ம்) லாகலீ(ம்) நாம
துஜே(ம்) (௫)
ராமா க்ருஷ்ணா ஹரீ கோவிந்தா கேசவா,
தேவா(ம்)சியா தேவா பாவே(ம்) ஆதா(ம்)
(௮)
கோண ரக்ஷீ ஆதா(ம்) ஐசியே ஸங்கடீ(ம்),
பாபா ஜகஜேடீ துஜவீண. (௭)
மான்கள், நான்கு பக்கங்களிலும் (இவ்வாறு
தப்பித்து ஓட முடியாதபடி, ஆபத்தால்) சூழப்பட்டன. அப்போது, அவைகள் உந்நாமத்தை
ஸ்மரித்தன. "ராமா, கிருஷ்ணா, ஹரி, கோவிந்தா, கேசவா, தேவாதிதேவா, எங்களை இப்போதே
காப்பாற்று. தந்தையே! ஜகஜேடி! இப்படிப்பட்ட ஸங்கடத்திலிருந்து, உன்னைத் தவிர வேறு
யாரால் எங்களை ரக்ஷிக்க முடியும்?" என்று துதித்தன. |
|
|
|
 |
|
ஆயிகோனீ து(ம்)ஹீ தயா(ம்)சீ(ம்)
வசனே(ம்),
க்ருபா அந்த:கரணே(ம்) களவளிலா(ம்).
(௮)
ஆக்ஞா தயே காளீ(ம்) கேலீ பர்ஜன்யாஸீ,
வேகீ(ம்) பாவகாஸீ விஜவாவே(ம்). (௯)
அவைகளின் பிரார்த்தனையைக் கேட்டு, நீ
மனதில் கிருபைகொண்டு, உருகிவிட்டாய். உடனே, வேகமாக (மழை பொழிந்து) நெருப்பை அணைக்க,
மேகங்களுக்கு உத்தரவிட்டாய். |
|
|
|
 |
|
ஸஸே(ம்) ஏக தேதே(ம்) உடவுனீ பளவிலே(ம்),
தயா பாடீ(ம்) கேலீ(ம்) ஸ்வானே(ம்)
தோன்ஹீ. (௧0)
ம்ருகே(ம்) சமகோனீ ஸத்வர சாலலீ(ம்),
கோவிந்தே(ம்) ரக்ஷிலீ(ம்)
ம்ஹணோனியா(ம்). (௧௧)
அதே சமயம் (நாய்களுக்கு எதிரே), ஒரு
முயலைத் தோற்றுவித்து, ஓடவிட்டாய். இரண்டு நாய்களும் அதன் பின்னால் ஓடின. உடனே,
மான்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிப்போயின . கோவிந்தன், இவ்வாறாக அவைகளை ரக்ஷித்தான்.
|
|
|
|
 |
|
ஐஸா தூ(ம்) க்ருபாளு தயாளூ ஆஹேஸீ,
ஆபுல்யா பக்தா(ம்)ஸீ ஜீவலக. (௧௨)
ஐஸீ துஜீ கீர்தி ஜீவீ(ம்) ஆவடதீ,
ரகுமாயீச்யா பதீ துகா ம்ஹணே. (௧௩)
(தேவா!) நீ இப்படிப்பட்ட கிருபை, தயை
நிறைந்தவனாகவும், தன் பக்தர்களின் உயிர்த் தோழனாகவும் இருக்கிறாய். துகாராம் மஹாராஜ்
சொல்லுகிறார். "ஹே ரகுமாயியின் பதியே! இப்படிப்பட்ட உன்னுடைய கீர்த்தி எங்களுக்கு
மிகவும் பிரியப்பட்டதாக இருக்கிறது". |
|