துகாராமும்

தமிழ்நாடும்

 

சரித்திரம்

 

உலக இலக்கியத்தில

 

சிறுவர் பகுதி

 

சிறுகதைகள்

 
உங்கள்கருத்து
 
முதல் பக்கம்
 
   

Font Problem

 

துகாராமும் தமிழ்நாடும்

 

  

    தமிழ் நாட்டில், ஸம்பிரதாய பஜனை பொதுவாக, ஸ்ரீ

 

 துகாராம் மஹாராஜின் அபங்கமான ’ஸுந்தர தே த்யான

 

 உபே விடேவரி’ என்பதைப் பாடி நிறைவு செய்யப்படுகிறது.

 

 300 வருடங்களுக்கு முன், முதன்முதலில், மராட்டி

 

 அபங்கங்களின் மஹிமையைத் தமிழ் நட்டிற்கு அறிமுகப்

 

 படுத்தியவர் மருதநல்லூர் ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள்

 

 ஆவார்கள்.

 

  ஸமீப காலத்தில், பஜன் பாடகர்களான ஸ்ரீ விடோபா

 

 நாயக், ஸ்ரீ வெங்கோபா நாயக் ஆகியோர் அபங்கங்கள்

 

 பாடப்படும் எல்லையை விரிவு படுத்தினார்கள். சுமார்

 

 1935 தென்கர்நாடகாவிற்குக் குடிபெயர்ந்த ஸ்ரீ விடோபா

 

 நாயக், ஸ்ரீ வாஸுதேவ நாயக் மற்றும் ஸ்ரீ வேங்கோபா

 

 நாயக் ஆகியோர், ’அபங்க் பஜன்’ பாடி, அதைத்

 

 தென்னிந்தியா முழுவதும் பரப்பினார்கள். ஸ்ரீ வெங்கோபா

 

 நாயக் அவர்களால் (௧௯௩௫ல்) மதுரையில் ’ஸேதுராம்

 

 பஜன் மண்டலி’ ஆரம்பிக்கப் பட்டது. ஸ்ரீ டி.வி. நாராயண

 

 சாஸ்த்திரி மதராஸில் ஒரு பஜன் மண்டலியைத்

 

 தொடங்கினார்.

 

    கடந்த நூறு வருடங்களாக திருவண்ணாமலை துகாராம்

 

 நிவாஸில் ’துகாராம் பீஜ்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

 

 ’ஸுந்தர தே த்யான’ மற்றும் ’பா ரே பாண்டுரங்கா’

 

 என்பவை பாரத ரத்னா ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியால்

 

 கச்சேரிகளில் பாடப்பட்ட பிரபலமான அபங்கங்களாகும்.

 

 அவர்காலத்தில் (1930 களில்) சரித்திரம் படைத்த வித்வான்

 

 முசிரி ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர் ’துகாராம்’ திரைப்படத்தில்

 

 துகாராமாக நடித்தார்.      

 

 

ஸ்ரீமதி கீதாநாரயணஸ்வாமி

 

 மஹிபதியின் துகாராம் சரித்திரத்தைத் தமிழில்

 

 மொழிபெயர்த்துள்ளார்.

 

 

 

இந்த பக்தி இயக்கத்தில் பெரிதும் பங்கேற்றவர் கவி ஸ்ரீ

 

 கிருஷ்ணப்ரேமி மஹாராஜ் ஆவார். அவருடைய சீடர்

 

 திருநெல்வேலி கடையநல்லூர் ஸ்ரீ துகாராம் கணபதி

 

 மஹாராஜ் ’ஹரிகீர்த்தன்’ நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

 

 தற்காலம் அவர் தன் குழுவினருடன் உலகம் முழுவதும்

 

 சுற்றி, மராட்டி அபங்கங்களைப் பாடி, தமிழில் அதற்கான

 

 அர்த்தத்தையும் விளக்கி வருகிறார்.

 

 

      ஸ்ரீ பாண்டுரங்க பஜனாஸ்ரமத்தின் தலைவர்

 

 விட்டல்தாஸ் ஸ்ரீ ஜயகிருஷ்ண தீக்ஷிதர் தஞ்சாவூர்

 

 மாவட்டம் கோவிந்தபுரத்தில் ஒரு விடோபா கோவில்

 

 கட்டிவருகிறார். இந்தக் கோவிலை பண்டரிபுரத்திலுள்ள

 

 விடோபா கோவில் மாதிரியே அமைக்க வேண்டும் என்று

 

 தீக்ஷிதர் கருதியுள்ளார். கட்டப்பட்டுவரும் இந்தக்

 

 கோவிலைச் சுற்றியுள்ள இடம் ’தக்ஷிணபண்டரிபுரம் எனப்

 

 பெயரிடப்படவுள்ளது.

 

    ஸ்ரீ விட்டல்தாஸின் கருத்துப்படி, மராட்டி

 

 அபங்கங்களைத் தமிழ்நாட்டில் பாடும் பாரம்பரியத்தை

 

 ஆரம்பித்த பெருமை, 300 ஆண்டுகளுக்கு முன் தேசம்

 

 முழுவதும் சுற்றி, மராட்டி அபங்கங்களையும் பஜன்களையும்

 

 தமிழ்நாட்டிற்களித்த மருதநல்லூர் ஸ்ரீ ஸத்குரு

 

 ஸ்வாமிகளையே சேரும். "நாங்கள் ஸ்ரீ ஸத்குருவின்

 

 அடிச்சுவடுகளைப் பின் பற்றி, அப்பாரம்பரியத்தக் காத்து

 

 வருகிறோம்" என்று தீக்ஷிதர் கூறுகிறார்.

 

 

    அவருக்குப் பிடித்தமான ஸந்த் யாரெனக் கேட்டதற்கு,

 

 சற்றே சிந்தித்துவிட்டு, "ஒரு துகாராம், ஒரு நாம்தேவ், ஒரு

 

 ஏக்நாத் ஆகியோருக்கு இடையில் வித்தியாசம் காண்பது

 

 அரிதாகும். இருந்தபோதிலும், துகாராம் மஹாராஜின்

 

 அபங்கங்களைப் பாடும்போது பக்தியும், ஆனந்தமும்

 

 மேலிடுகின்றன என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக

 

 வேண்டும்", எனச் சொன்னார். "ஸந்த் துகாராம்

 

 இணையற்றவர். ஏனென்றால், அவர் பெரிய வேதாந்தக்

 

 கருத்துகளை, சாமான்ய மனிதனின் பாஷையாக

 

 எளிமைப்படுத்தி விட்டார்", என்பது ஸ்ரீ விட்டல்தாஸின்

 

 கருத்து.